Skip to main content

ஆறாவது முறை திருமணம் செய்ய முயன்ற முன்னாள் அமைச்சர்... மூன்றாவது மனைவி புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021

 

former up minister

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர் சவுத்ரி பஷீர். இவர் மீது இவரது மூன்றாவது மனைவியான நக்மா, ஆக்ரா காவல்துறையிடம் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், சவுத்ரி பஷீர் ஆறாவது முறையாக திருமணம் செய்ய முயற்சி செய்வது தனக்குத் தெரியவந்ததாகவும், இதனையடுத்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும், சவுத்ரி பஷீர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆக்ரா காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் மீது ஐபிசி பிரிவு 504இன் கீழும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019இன் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

 

நக்மாவும் சவுத்ரி பஷீரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தன்னை சவுத்ரி பஷீரும் அவரது சகோதரியும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து சவுத்ரி பஷீர் 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்