Advertisment

கோவா தேர்தல்; ஒரேநாளில் இரட்டை அதிர்ச்சியை சந்தித்த பாஜக!

goa

கோவா மாநிலத்தில்அடுத்த மாதம் 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில்கோவாமாநிலத்தின் ஆளுங்கட்சியாக பாஜகவைச்சேர்ந்த அமைச்சர்மைக்கேல் லோபோ தனது அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மேலும் கட்சியிலிருந்தும் விலகியுள்ளார்.அண்மையில் பாஜகவில் இருந்து இரண்டு கிறிஸ்துவஎம்.எல்.ஏ.க்கள்விலகிய நிலையில், மூன்றாவது கிறிஸ்துவஎம்.எல்.ஏ.வாக மைக்கேல் லோபோ கட்சியிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மைக்கேல் லோபோவின்விலகல், கோவா மாநிலத்தின் ஆறு தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மைக்கேல் லோபோ விலகியிருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.வானபிரவின் ஜான்டியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால், பிரவின் ஜான்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Goa
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe