Skip to main content

மீனைப்பிடி...காசைப்பிடி... யூ டியூப்பால் லட்சாதிபதியான தொழிலாளி!

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார் என்பது உண்மை தான். கேரளாவை சேர்ந்த ஒருவர் கஷ்டத்தில் இருந்து மீண்டு இப்போது, புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட அவர், இன்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்றால் அவரது திறமையும், தன்னம்பிக்கையும் தான்.

Millionaire growth worker by using You Tube chennel

கேரளாவின் மீனவ கிராமமான கும்பளங்கியை சுற்றிலும் உள்ள தெளிவான கழிமுக நீரை காண்பதற்கு அவ்வளவு வசீகரமாக இருக்கும். கடவுளின் தேசத்தில் உள்ள இந்த அழகான காட்சி, உன்னி ஜார்ஜ் வாழ்க்கையின் கஷ்ட காலங்களிலும் சரி, நல்ல காலங்களிலும் சரி, அப்படியே அவரது மனதில் தங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு உன்னி ஜார்ஜ் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அடுத்த பேரிடியாக சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வைத்திய செலவுக்கே பணம் இன்றி அவதிப்பட்ட உன்னி, குடும்பத்தையும் கவனிக்க முடியாத நிலைக்கு ஆளானார்.

Millionaire growth worker by using You Tube chennel

 

உன்னியின் நிலைமை அறிந்து அவரது நண்பர்கள் சிலர் பண உதவி செய்தாலும், அது போதுமானதாக இல்லை. ஏனென்றால் உன்னியின் அறுவைச் சிகிச்சைக்கு மட்டுமே ரூ.15 லட்சம் தேவைப்பட்டது. ஆகையால் அவரது நண்பர்கள் நிதி திரட்டுவதற்கு வசதியாக உன்னியின் நிலைமை பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதைக்கண்டு ஓரளவுக்கு பண உதவி கிடைத்தது. அந்த பணத்தைக் கொண்டும், கடன் வாங்கியும் சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் உன்னி ஜார்ஜ். வாங்கிய கடனை கட்ட வேண்டும், வீட்டு செலவுக்கும் பணம் வேண்டுமே என எண்ணிய உன்னி ஜார்ஜ், அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போய் இருந்தார்.

Millionaire growth worker by using You Tube chennel

ஒருநாள் கழிமுகப்பகுதியில் அமர்ந்து ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது, சமூக வலைத் தளமான யூடியூப்பில் உள்ள படங்கள் குறித்து, நண்பர்கள் எடுத்துக் கூறி இருக்கின்றனர். யூடியூப் உலகம் மிகப்பெரியதுஅதனுள் சென்று பார்த்தபோது, யூடியூப் உலகம் மிகப் பெரியது என்பதை உணர்ந்தார் உன்னி. OMKV Fishing & Cooking சானல் என்ற பெயரில் தனக்கென அக்கவுன்ட் கிரியேட் பண்ணிய உன்னி ஜார்ஜ், கழிமுகத்திலிருந்து தானே மீன்பிடித்து அதை சமைக்கவும் செய்தார். அதை நண்பர்கள் உதவியுடன் வீடியோ பதிவு செய்து, யூடியூப்பில் பதிவேற்றினார். நாளடைவில் வீடியோவிற்காக கொச்சி, திருவல்லா, கோழிக்கோடு, வயநாடு கடற்கரை பகுதிகளில் பயணம் செய்து, விதவிதமான மீன்களை பிடித்து தனக்கே உரிய தனித்துவப் பாணியில் உள்ளூர் முறையில் சமைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இதுவரை 143 வீடியோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.

Millionaire growth worker by using You Tube chennel


ஒவ்வொரு வீடியோவும் மலையாள மொழியில் கூற வேண்டும் எனில் அடிபொலி. உன்னியின் கைவண்ணத்தால்  யூ- டியூப்பில் பார்வைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதற்கேற்ப வருமானமும் ஒவ்வொரு மாதமும் லட்சத்தை தாண்டியிருக்கிறது. உன்னியின் யூ- டியூப் சேனலை சுமார் 2.74 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இதன் மூலம் இந்தியாவின் மிகப் பிரபலமான யூ- டியூப்  ஸ்டார்களில் ஒருவராக திகழ்கிறார் உன்னி ஜார்ஜ். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...