milk producers request to government raise purchase price milk 

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையைஉயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

புதுச்சேரி அரசுபால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலை ஏற்கனவே 34 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 3 ரூபாயை அதிகரித்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், இதுவரை உயர்த்தப்பட்ட விலையையும் கொடுப்பதில்லை;மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் விலை உயர்ந்து விட்டதால் கொள்முதல் விலையை 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்;நடமாடும் கால்நடை மருத்துவமனைகள்அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஊர்வலமாகச் சென்று சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பால் உற்பத்தியாளர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் அடுத்தகட்டமாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத்தெரிவித்தனர்.