Advertisment

போலீஸ் அதிகாரிகளுக்கு பாலாபிஷேகம்: வைரலாகும் புகைப்படம்!

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்த 4 குற்றவாளிகள் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், பெண்ணியவாதிகள் மற்றும் பலர் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது போன்று உடனடியாக நீதி கிடைத்தால் மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

d

இந்த நிலையில் ஒரு பக்கம் போலீஸ் அதிகாரிகளை பொதுமக்களும் சமூக வலைதள பயனாளிகளும் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் சிலர் தங்களுடைய கல்லூரி வளாகத்தில் என்கவுண்டர் சம்பவத்திற்கு முக்கிய காரணமான காவல் ஆணையர் சஜ்ஜனார் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சமூகத்தில் விழிப்புணர்ச்சி அதிகரித்துவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe