Published on 16/03/2023 | Edited on 16/03/2023

பட்டப்பகலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்ததால் நள்ளிரவு போல் காட்சியளித்த சம்பவம் மிசோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரத்தின் தலைநகரில் மதியம் ஒரு மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டதால் நள்ளிரவு போல் காட்சியளித்தது. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுத்தான் வாகனங்களை இயக்க முடிந்தது. இந்தநிலை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. மிகவும் அடர்த்தியாக கருமேகங்கள் சூழ்ந்ததால் இரவு போல் காட்சியளித்ததால் அப்பகுதி மக்கள் வியப்படைந்ததோடு பீதியிலும் காணப்பட்டனர். மேலும் பலர் இந்த காட்சிகளை காணொளிகளாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.