/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dwdw_0.jpg)
டெல்லி அரசின் போக்குவரத்துக் கழகம், 1000 லோ ஃப்ளோர் (low floor) பேருந்துகளை வாங்கவும், அவற்றைப் பராமரிக்கவும் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக டெல்லி பாஜக குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து, இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க டெல்லியின் துணை நிலைஆளுநர் மூன்று பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தார்.
அந்தக் கமிட்டி தனது அறிக்கையில், பேருந்துகளைப் பராமரிப்பதற்காக செய்யப்பட்ட வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தில்குறைபாடுகள் உள்ளதாக கூறியது. இதனையடுத்துடெல்லி துணை நிலை ஆளுநர், டெல்லி அரசு செய்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதன்தொடர்ச்சியாக தற்போது, மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் ஒப்பந்தம் குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்துமாறு சிபிஐக்குப் பரிந்துரைத்துள்ளது.ஏற்கனவே டெல்லி துணை முதல்வர்மனிஷ் சிசோடியா, "பாஜக தவறான குற்றசாட்டுகளை எழுப்பி ஆம் ஆத்மி அரசிற்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிக்கிறது" என இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)