Advertisment

மீடூவில் மாட்டிய அமைச்சர் தொடர்ந்த வழக்கின் விசாரணை....

mj

பிரியா ரமணி என்னும் பெண் பத்திரிகையாளர், அமைச்சர் எம்.ஜே அக்பர் மூத்த பத்திரிகையாளராக இருந்தபோது என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொண்டார் என்று #metoo வில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து பாஜகவைச் சேர்ந்த எம்.ஜே அக்பரின் மீது பலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இதற்கு பதில் தராமல் இருந்தவர் நேற்று முந்தினம் இந்தியா வந்தவுடன் பதிலளித்தார். இது அனைத்தும் தவறான புகார், தேர்தல் வரும் நேரத்தில் பொய்யான புகாரை செலுத்துகின்றனர் என்றார்.

Advertisment

அதேபோல, என்மீது புகார் அளித்தவர்களின் மேல் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக மோதுவேன் என்றார். இந்நிலையில், தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பிரியா ரமணி மீது அமைச்சர் எம்.ஜே.அக்பர் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு வருகின்ற 18ஆம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Advertisment
m.j. akbar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe