Skip to main content

மீடூவில் மாட்டிய அமைச்சர் தொடர்ந்த வழக்கின் விசாரணை....

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
mj


பிரியா ரமணி என்னும் பெண் பத்திரிகையாளர், அமைச்சர் எம்.ஜே அக்பர் மூத்த பத்திரிகையாளராக இருந்தபோது என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொண்டார் என்று #metoo வில் பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து பாஜகவைச் சேர்ந்த எம்.ஜே அக்பரின் மீது பலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இதற்கு பதில் தராமல் இருந்தவர் நேற்று முந்தினம் இந்தியா வந்தவுடன் பதிலளித்தார். இது அனைத்தும் தவறான புகார், தேர்தல் வரும் நேரத்தில் பொய்யான புகாரை செலுத்துகின்றனர் என்றார்.
 

அதேபோல, என்மீது புகார் அளித்தவர்களின் மேல் வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக மோதுவேன் என்றார். இந்நிலையில், தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பிரியா ரமணி மீது அமைச்சர் எம்.ஜே.அக்பர் வழக்கு தொடர்ந்தார். இந்த அவதூறு வழக்கு வருகின்ற 18ஆம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு  வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதாரம் தாக்கல் செய்ய வேண்டும்...’மீடூ' அமைச்சரின் வழக்கு...

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
mj akbar


மீடூ புகாரில் தன் மீது புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார் எம்.ஜே. அக்பர். இவர் முன்பு மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்து, பின்னர் பாஜகவில் இணைந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சராகினார். பின்னர் மீடூ புகாரினால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லி ராஜினாமா செய்தார். இந்த வழக்கு இன்று டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. அப்போது இந்த வழக்கிற்கான ஆதாரங்களை வருகின்ற 31ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்.ஜே அக்பருக்கு உத்தரவிட்டு, அக்டோபர் 31ஆம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

பிரதமர் மோடிக்கும், அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கும் நன்றி -எம்.ஜே. அக்பர்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

 

மீ டூ விவகாரத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர்  பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார், அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, 


பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கும் நன்றி, என்மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானவை,  நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் வாயிலாக நிரூபிப்பேன். 

 

எம்.ஜே. அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரியா ரமணி புகாராளித்தார். அதை மறுத்துவந்த அக்பர் தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ‘மீ டூ’ புகாரில் ராஜினாமா செய்த முதல்  அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.