Advertisment

ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டாயம்; புதுவை அரசு அதிரடி

Meters mandatory for autos; puduchery govt

Advertisment

புதுச்சேரியில் ஆட்டோவிற்கு மீட்டர் பொருத்துவது கட்டாயம் என அம்மாநில போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்டர் பொருத்தாத, வரையறுத்த கட்டணத்தை வசூலிக்காத ஆட்டோ உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்கள் 1.8 கிலோமீட்டருக்கு 35 ரூபாயும் ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களுக்கு மீட்டர் பொறுத்தப்படுவதும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

auto Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe