Advertisment

பேருந்துக்குள் வைத்து பெண் நடத்துனர் மீது ஆசிட் அடித்த மர்ம நபர்கள்!

பெங்களூர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றிவருபவர் 39 வயதான இந்திரா. 18 வருடங்களாக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் அவருக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் அவரது கணவரும் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பணிக்கு சென்ற இந்திரவை பேருந்து உள்ளே வைத்து அவரது முகத்தில் மர்ம நபர்கள் ஆசிட் அடித்துள்ளார்கள்.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் துடித்துள்ளார். பேருந்தில் உள்ளவர்கள் ஆசிட் அடித்தவர்களைபிடிக்க முயன்றாலும், அவர்களிடம் சிக்காமல் அவர்கள் தப்பித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்துகாவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள். நடத்துனர் மீது மர்ம நபர்கள் ஆசிட் அடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பகை காரணமாக இது நடைபெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Advertisment
bus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe