பாட்னா அருகே ரயிலில் இளம் பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா-பாவுமா இண்டர்சிட்டி ரயில் சில தினங்களுக்கு முன்பு கயா ரயில் நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது நான்கு நபர்கள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர். அதே ரயிலில் 22 வயது இளம் பெண் ஒருவர் பயணம் செய்து வந்துள்ளார். அவர் எச்ஐவி நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்.

Advertisment

ரயிலில் கூட்டமில்லாத காரணத்தால் அந்த இளம்பெண்ணிடம் அந்த நான்கு இளைஞர்கள் அத்துமீறியுள்ளனர். ரயில் வேகமாக செல்ல ஆரம்பித்துடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த ரயில் நிலையத்தில் அந்த ரயில் நின்றவுடன் அதில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பெட்டிகளை ஆய்வு செய்தபோது இளைஞர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்வதை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர்களை பிடிக்க முயன்ற போது இருவர் அவர்களிடம் இருந்து தப்பி சென்றனர். இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.