Advertisment

உச்சநீதிமன்ற உத்தரவால் வெற்றி கிடைத்துள்ளது- மம்தா பானெர்ஜி

ghjgfhg

சாரதா சிட்பண்ட் மற்றும் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் மேற்குவங்க காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisment

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ செயல்பாடுகளை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி 3 நாட்களாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக்கூடாது மற்றும் கட்டாய வாக்குமூலம் வாங்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது குறித்து பேசியுள்ள மம்தா பானெர்ஜி, 'சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என சொல்லவில்லை. ஆனால் அரசியல் ரீதியாக சிபிஐ பயன்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போதைய உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்' என கூறியுள்ளார்.

saradha chitfund CBI investigation mamta banarji west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe