Advertisment

வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் பொழுது தடுமாறி ஆற்றில் விழுந்த பாஜகவினர்!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் உட்படபல தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

அவரது மறைவை அடுத்து பாஜக தலைமை அவரது அஸ்தி நாடுமுழுவதும் உள்ள நதிகளில் கரைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகளையும் அழைத்து அவர்களுக்கு வாஜ்பாயின் அஸ்தி கலசம்வழங்கப்பட்டது. அதேபோல் உத்தரபிரதேசம் மாநிலம் பஷ்டி பகுதியை சேர்ந்த முக்கிய பாஜக நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.

Advertisment

river

river

இந்நிலையில் உத்தரப்பிரதசம் மாநிலத்திலுள்ள குனவோ ஆற்றங்கரையில் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆற்றில் அஸ்தி கரைக்கும் நிகழ்வில்கலந்துகொண்டனர். அப்போது அஸ்தியை கரைக்க ஒரு சிறிய படகில் அதிகமானோர் ஏறி ஆற்றில் கரைக்க முற்பட்டபோது படகு கவிழ்ந்துஎம்.பிக்கள், உட்பட பலர் ஆற்றில் தடுமாறி குதித்தனர்.

ஆற்றில் விழுந்தவர்கள் உடனே மீட்கப்பட்டதால் எந்தவித பாதிப்பும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

MLA river vajpayee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe