Published on 15/07/2021 | Edited on 15/07/2021

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அனைத்துக் கட்சிகளின் குழு நாளை (16/07/2021) டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தைச் சந்திக்கின்றன. அப்போது, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகதாது அணையைக் கட்டக்கூடாது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை மத்திய அமைச்சரிடம் அளிக்க உள்ளனர்.
இந்த நிலையில், நாளை (16/07/2021) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா சந்திக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன. அப்போது, மேகதாது அணைக்கு உடனே அனுமதி தர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சருடன் மாநில சட்டத்துறை அமைச்சரும் டெல்லிக்கு செல்கிறார்.