Advertisment

14 மாதங்களுக்குப் பிறகு மெகபூபா முப்தி விடுதலை...

mehbooba mufti released

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி 14 மாதங்கள் தடுப்பு காவலுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு வழிவகை செய்யும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

Advertisment

இவர்களில் பெரும்பாலானோர் ஓராண்டுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலையில், மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அண்மையில் உச்சநீதிமன்றம் அரசுக்குப் பிறப்பித்த உத்தரவில், மெகபூபா முப்தி விடுதலை குறித்து இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் 14 மாத தடுப்பு காவலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

jammu and kashmir Mehbooba mufti
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe