Advertisment

ஆங்கிலம் தெரியாததால் மாணவனுக்கு காலணி மாலை; ஆசிரியரின் கொடூரச் செயல்!

Meghalaya Teacher forced girl  wear shoelaces for failing to speak English

மத்திய மாநில அரசுகள் அனைத்து மாணவர்களும் கல்வி பயில வேண்டும்என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது ஒருபுறமிருக்கமேகாலயாவில்ஆசிரியர் ஒருவர் மாணவரிடம்அருவருக்கத்தக்கச்செயலை செய்துள்ளார்.

Advertisment

மேகாலயாமாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆங்கிலம்பேசத்தெரியாமல் மாநில மொழியில் பேசியுள்ளார். அதனால் அப்பள்ளியின் ஆசிரியர் அந்தமாணவனைத்தண்டிக்கும் விதமாக அவரின் கழுத்தில் அழுக்குஅடைந்தசெருப்பு மாலை அணிவித்து சக ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் முன்னிலையில்பரேட்செய்ய வைத்துள்ளார்.தனக்குப்பள்ளியில் நடந்ததை மாணவர் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, “பள்ளியின் இந்த செயல் மிகவும் தவறானது, சட்ட விரோதமானதும் கூட. ஆசிரியரின் அந்த செயலால் எனதுமகன்பள்ளிக்குச்செல்ல முடியாமல்மனரீதியாகப்பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என மாணவரின் பெற்றோர் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநிலக் கல்வித்துறைஅமைச்சர்ரக்கம் ஏ. சங்மா, ‘சம்பவம்குறித்துச்சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் துணை ஆணையரிடமும், கல்வி அதிகாரியிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

meghalaya school student teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe