Advertisment

32 நாட்கள் போராட்டத்திற்கு பின் 160 அடி ஆழத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்; மேலும் 14 பேரின் உடல்கள்...

yhjdf

மேகாலயாவின் ஜெயின்டியா மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க சரிவில் கடந்த மாதம் 15 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கினார். இந்த சுரங்கம் முறையான அனுமதியின்றி செயல்பட்டுவந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பலதரப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்திய கடற்படை மேற்கொண்ட மீட்பு பணியில் இன்று காலை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 160 அடி ஆழத்தில் தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தினுள் மாட்டிக்கொண்ட மேலும் 14 பேரின் உடல்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

Advertisment

meghalaya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe