குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேகாலயாவில் ஏற்பட்ட வன்முறையில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த வாரம் நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லி பதட்டமான சூழலை சந்தித்தது. கண்ணீர்புகைக் குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் கடைகள், வீடுகள் மற்றும் பொதுச்சொத்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில், சிஏஏ விவகாரத்தில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் இல்லாதோர் இடையே ஏற்பட்ட மோதல் தற்போது ஷில்லாங்கின் பல இடங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இணையதள சேவையும் 48 மணிநேரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 10 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.