தமிழகம் கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டதொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மேகதாது அணைக்கு எப்பொழுது அனுமதி என மக்களவையில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய அரசு சார்பில், 'சம்பந்தப்பட்ட தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசுகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படும்' என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.