மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரியில் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடகாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேகதாதுவில் அணைக்கட்டுவதில் கர்நாடகா உறுதியோட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.