Skip to main content

3 இடியட்ஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்...

Published on 14/01/2019 | Edited on 14/01/2019

 

ftdh

 

பிகே, 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மீது அவரது பெண் உதவி இயக்குனர் ஒருவர் மீடூ புகார் தெரிவித்துள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான அவரது சஞ்சு திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு பெண் உதவி இயக்குனர் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை ஹிராணி தரப்பு மறுத்துள்ளது. இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் கூறுகையில், ' இது ஒரு தவறான, பொய்யான, உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு' எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அந்த பெண் இயக்குனர் தன பெயரை வெளியிடாமல் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் செப்டம்பர் 2018 க்குள் ஹிரானி தன்னை பல முறை  பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 3 தேதி சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அவர் கூறினார். மேலும் ஹிரானி, அவரது வீட்டு அலுவலகத்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டினார் எனவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ், நண்பன் போன்ற படங்களை இந்தியில் இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிப்பு கத்துக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

me too allegation against malayalam actor aneesh menon

 

மலையாளத்தில் 'லுசிபார்', 'ஓடியன்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான அனீஸ் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீ டூ புகார் அளித்துள்ளார். 

 

இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், எனக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம். குறிப்பாக மோனோ ஆக்ட். இதனை உணர்ந்த என் பெற்றோர் குழந்தைகளுக்கு மோனோ ஆக்ட் மற்றும் நாடகம் என இரண்டையும் கற்றுக்கொடுக்கும் அனீஸ் மேனன் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர். நானும் வகுப்பிற்கு சென்று வந்தேன். என் மீதி அதிக அனுப்பு கட்ட தொடங்கிய அவர் நாளாக நாளாக என்னிடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டார். கன்னங்களை தொடுவது, உடலை தொடுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட தொடங்கினர். பொசிஷன் திருத்தம், தோரணை அழகு எனக் குறி என்னுடைய அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார்.  

 

இதனை நடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோர்களையே நம்ப வைத்துவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் சென்ற அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நேரத்தில் அழுகையாகவும், பயமாகவும், இருந்தது. இதையடுத்து எனக்கு நடிப்பு பயிற்சி வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறி விட்டேன். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர எனக்கு பல வருடங்கள் ஆனது. என்னை போல நிறைய பேர் அனீஸ் மேனனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்னை போன்ற ஒருவர் வெளிப்படையாக பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வரும் என்பது எனது நம்பிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

அனீஸ் மேனன் மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால்  மகளாக வரும் அனிசபா குளிக்கும் போது படம் பிடித்து மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

Next Story

9 பெண்கள் மீ டூ புகார்; வானொலி நிலைய ஊழியர் மீது நடவடிக்கை...

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

 

met

 

மீ டூ ஹாஷ்டாக் மூலம் பாலியல் சீண்டல்கள் குறித்து புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் டெல்லியில் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் உள்ள அதிகாரி மீது அவருடன் வேலை பார்க்கும் 9 பெண்கள் தேசிய பெண்கள் ஆணையத்தில் மீ டூ குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு அந்த அதிகாரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு தண்டனையாக ஒரு ஆண்டு தற்காலிக பதவியிறக்கமும், சம்பள பிடித்தமும் செய்யப்படும் என பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது.. பாலியல் புகாருக்கு இவ்வளவு குறைவான தண்டனையா என்று புகார் அளித்த பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.