தங்களது வீட்டின் முன் கலர் பேப்பர்களால் சுற்றப்பட்ட தீபாவளி பரிசு பார்சலை இரு சிறுமிகள் பிரித்து பார்த்தபோது, அது வெடித்ததில் இரு சிறுமிகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.

Advertisment

meerut fire accident

உத்தரபிரதேசம் மீரட் அருகில் உள்ள பிலானோ கிராமத்தை சேர்ந்த மெஹாகர் சிங் என்பவரது மகள்கள் நிதி (வயது 13) ராதிகா (வயது 11). இன்று அவர்களது வீட்டின் முன் கலர் பேப்பர்களால் சுற்றப்பட்ட தீபாவளி பரிசு பார்சல் ஒன்றை பார்த்துள்ளனர். அதனை வெற்றிகள் எடுத்துவந்த சிறுமிகள், அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது திடீர் என பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் 2 சிறுமிகளும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக சிறுமிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தநிலையில், இந்த பார்சல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.