Advertisment

கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி!

Medical student manslaughter Maharashtra

மஹாராஷ்டிரா மாநிலம் நாந்தெட், பிம்ப்ரி மகிபால் பகுதியைச் சேர்ந்தசுபாங்கி ஜோக்தாந்த்(22) ஹோமியோபதி மருத்துவம் 3ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.சுபாங்கியைதிருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர்ஒரு மாப்பிள்ளையையும் பார்த்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணமும் நடைபெறுவதாகவும் இருந்துள்ளது.

Advertisment

இதனிடையேசுபாங்கி, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக மாப்பிள்ளையிடமே கூறி திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுபாங்கியின் பெற்றோர் அவரைத்தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், சுபாங்கி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சுபாங்கி குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சுபாங்கியின் பெற்றோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சுபாங்கி வேறு ஒருவரை காதலித்து வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது தந்தை ஜனார்தன், சகோதரர் கோசவ் மற்றும் உறவினர் கிரிதர் ஆகியோருடன் சேர்ந்து சுபாங்கியை யாருமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரைக் கொலை செய்து, உடலை எரித்து பின் சாம்பலை அருகே உள்ளஆற்றில் கரைத்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தந்தை ஜனார்தன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

Maharashtra student woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe