medical student issue... Two including a policeman arrested!

கலாச்சார திருவிழாவிற்கு வந்திருந்த மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் காவலர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அண்மையில் கலாச்சாரத் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஹைத்ராபாத்தை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவரும் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு மது போதையிலிருந்த இருவர் அப்பெண்ணிற்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் கண்ணன் என்பவரும் அவரது உறவினர் சிவா என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதில் கண்ணன் காவலராக உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களை காக்க வேண்டிய காவலரே மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment