publive-image

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு அரசுடன் தொடர்பில் இருப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இலங்கையில் உள்ள இந்தியர்களின் நிலைக் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்துள்ளார்.

Advertisment

அதில், கடந்த ஜனவரி மாதம், இந்திய அரசு இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளதாகவும், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு, அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளதாகவும் பதிலில் கூறப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகளான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்திய அரசு கடனாக இலங்கைக்கு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 4,500 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அங்குள்ள இந்திய தூதரகம் இலங்கை அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.