Advertisment

''மனைவி சிக்கி இறந்துட்டாங்க... சேலத்தில் இருந்து வர்றேன்...''- திருப்பதியில் நேர்ந்த துயரம்

publive-image

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினந்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (10.01.2024) சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னதாக பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து திருமலையில் உள்ள ஏழுமலையானைத் தரிசிக்க முடியாத வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலும் ஏழுமலையானுக்குக் கோயில்கள் அமைக்கும் பணியைத் திருப்பதி தேவஸ்தான அமைப்பு தொடங்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர், ஹைதராபாத் மற்றும் ஜம்மு ஆகிய 6 இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் தன்னுடைய மனைவியை இழந்த சேலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கண்ணீருடன் பேட்டியளித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ''சேலம் மேச்சேரியில் இருந்துவந்தோம்சார். இப்ப இங்க நான் ஒருத்தன் தான் சார் இருக்கேன். எல்லாம் விட்டுட்டு போயிட்டாங்க. என்னோட வைஃப் இறந்து போயிருச்சு. சேலத்தில இருந்து வருகிறேன். என்ன பண்றதுன்னு தெரியல சார். என்னோட உறவினர்களுக்கு சொல்லி இருக்கிறேன் வந்து கொண்டிருக்கிறார்கள் சார். நாங்க ஒரு பத்துபேர் வந்தோம் சார். ஆனா எல்லோரும் விட்டுட்டு போயிட்டாங்க சார்'' என பேசும்பேட்டிய வைரலாகி வருகிறது.

accident police Salem Tirupati
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe