Advertisment

இந்த கொடுங்கோல், மக்கள் விரோத மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது- அத்வானியின் அறிக்கையை மேற்கோள்காட்டி மாயாவதி கருத்து...

கடந்த 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக இன்று அதன் 39 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது.

Advertisment

mayawati slams bjp on its foundation day

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள மாயாவதி, "பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசை குறிப்பதாகவே உள்ளது. பாஜக தனது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில் அந்த கட்சியின் மீதான நம்பகத்தன்மை இறந்துவிட்டது. எனவே இந்த கொடுங்கோல், மக்கள் விரோத மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது" என கூறியுள்ளார்.பாஜக எதிர்வரும் மக்களவை தேர்தலில் அத்வானிக்கு வாய்ப்பளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதனை தொடர்ந்து அத்வானி நேற்று வெளியிட்ட அறிக்கை பாஜக -வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில் மாயாவதி இப்படி பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

mayawati Advani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe