Skip to main content

‘இன்று மோடியின் தூக்கம் கெட்டது’- ஆகிலேஷுடன் மாயாவதி பேட்டி

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
mayawathi


உத்தரபிரதேசம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.
 

 ‘இரு மாபெரும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதால் மோடி, அமித்ஷாவுக்கு இன்றைய தூக்கம் கலையும்’ லக்னோவில் உபி முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி. மேலும்,  ‘நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்ததால் பாஜகவுக்கு அச்சம்’ என்று கூறியுள்ளார் மாயாவதி.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
CM MK Stalin Thanks to Akhilesh Yadav

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. அதோடு நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரைக் குஜராத் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான ஆங்கில செய்தியைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நீட் தேர்வு தொடர்பாகச் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. 

CM MK Stalin Thanks to Akhilesh Yadav

பல்லாயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமை வித்தியாசமான முகத்தைக் காட்டுகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பணப் பலன்களுக்காக ஓ.எம்.ஆர். தாள்களைத் தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்தியதாகக் குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. பள்ளியின் முதல்வர், இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு தொடர்பாக முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

CM MK Stalin Thanks to Akhilesh Yadav

இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு, ஒரே கோரிக்கையாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலைத் தெளிவாக உரக்க எதிரொலிப்பதற்காக அன்பிற்குரிய அகிலேஷ் யாதவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

அயோத்தியில் பா.ஜ.க தோற்கப்பட்டது ஏன்?; அகிலேஷ் யாதவ் பதில்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Akhilesh Yadav Answer Why was BJP defeated in Ayodhya?

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க சொல்லி வந்த நிலையில், 240 இடங்களைக் கைப்பற்றியதால் எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.கவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அங்கு அதிகப்படியான இடங்களைப் பெற்றனர். இதனையடுத்து, அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காகப் பூமி பூஜை செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி பிரமாண்டமாகக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராமர் கோவில் விவகாரம், அங்குக் கோவில் கட்டப்பட்டதிலிருந்து அந்த விவகாரம் எடுபடவில்லை என்றே கூறப்படுகிறது. அதில் ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான அயோத்தியை ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்துள்ளது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் இன்று (06-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பற்றியும், பா.ஜ.கவின் தோல்வி பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க இன்னும் அதிக இடங்களை இழந்திருக்கும் என்பதே உண்மை. அயோத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியின் வலியை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது, சந்தை விலைக்கு நிலம் கையகப்படுத்தப்படவில்லை, அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக நிலத்தை பறித்தார்கள் புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள் அதனால்தான், அயோத்தி மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள மக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என நினைக்கிறேன்” என்று கூறினார்.