ADVERTISEMENT

"இது கடைசி குட் மார்னிங்காக இருக்கலாம்" - உயிரிழந்த மருத்துவரின் இறுதி ஃபேஸ்புக் பதிவு..!

03:23 PM Apr 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ரா மாநிலம்தான் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்களுக்கு கரோனா உறுதியாகி வருகிறது.

இந்தநிலையில், மும்பையை சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர், தனது மரணத்தை முன்கூட்டியே ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிட்டு உயிரிழந்துள்ளார். அந்த மருத்துவர் மனிஷா ஜாதவ் என்பவராவார். மும்பையிலுள்ள செவ்ரி காசநோய் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மனிஷா ஜாதவ், தனது ஃபேஸ்புக்கில் "இது கடைசி குட் மார்னிங்காக இருக்கலாம். நான் மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திக்க முடியாமல் போகலாம். அனைவரும் உங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உடல் சாகும்; உயிர் சாகாது; உயிருக்கு அழிவில்லை" என தெரிவித்திருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட கிட்டத்தட்ட 36 மணி நேரத்தில் மனிஷா ஜாதவ் உயிரிழந்துள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் தனது மரணத்தை முன்பே தெரிவித்துவிட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT