Advertisment

"இது கடைசி குட் மார்னிங்காக இருக்கலாம்" - உயிரிழந்த மருத்துவரின் இறுதி ஃபேஸ்புக் பதிவு..!

manisha yadav

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலைநாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு, கரோனாவால்பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராமாநிலம்தான்கரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர்களுக்கு கரோனாஉறுதியாகி வருகிறது.

Advertisment

இந்தநிலையில், மும்பையைசேர்ந்தகரோனாவால்பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர், தனது மரணத்தை முன்கூட்டியே ஃபேஸ்புக்கில் தெரிவித்துவிட்டு உயிரிழந்துள்ளார். அந்த மருத்துவர் மனிஷா ஜாதவ்என்பவராவார். மும்பையிலுள்ளசெவ்ரி காசநோய் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisment

கரோனாவால் பாதிக்கப்பட்ட மனிஷா ஜாதவ், தனது ஃபேஸ்புக்கில் "இது கடைசி குட் மார்னிங்காக இருக்கலாம். நான் மீண்டும் உங்களை இந்த தளத்தில் சந்திக்க முடியாமல் போகலாம். அனைவரும் உங்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். உடல் சாகும்;உயிர் சாகாது;உயிருக்கு அழிவில்லை" என தெரிவித்திருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட கிட்டத்தட்ட 36 மணி நேரத்தில்மனிஷா ஜாதவ் உயிரிழந்துள்ளார். கரோனாவால்பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் தனது மரணத்தை முன்பே தெரிவித்துவிட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, நாட்டில் கரோனா பாதிப்பின் தீவிரத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

corona virus Doctor Mumbai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe