டெல்லியில் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட மறுத்ததால் 3 பேர் கொண்ட கும்பல் இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை கார் மூலம் தாக்கியுள்ளது.

 Maulana claims he was hit by car for refusing to chant Jai Sri Ram

Advertisment

Advertisment

டெல்லியின் ரோகிணி செக்டார் பகுதியில் உள்ள மதரசாவில் பயிற்சி அளிக்கும் மதபோதகர் மவுலானா மொமின், நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு காரில் வந்து வழிமறித்த 3 பேர் மவுலானா மொமினிடம் பேசியுள்ளனர்.

பின்னர் அவரிடம் நலம் விசாரித்த போது, அல்லாவின் கருணையால் நலமுடன் இருக்கிறேன் என அவர் பதிலளித்துள்ளார். இதனையடுத்து 3 நபர்களும் மவுலானாவை ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட வலியுறுத்தியுள்ளனர். அவர் ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்ததால் அவரை கடுமையாக தாக்கிய நபர்கள் அவரை காரை வைத்து இடித்துள்ளனர்.

அதில் மொமீன் கடுமையாக காயமடைந்த நிலையில் மயக்கமடைந்துள்ளார். மொமினை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மொமினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.