nn

Advertisment

அண்மையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில்வீடியோஒன்று வெளியாகியது. இந்தவீடியோபோலியானதுஎனதமிழககாவல்துறைதலைவர்சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளவீடியோபதிவில், “பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியானவீடியோஒன்று சமூகவலைதளத்தில்பதிவிடப்பட்டுள்ளது. இரண்டுவீடியோக்கள்பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டுவீடியோக்களுமேபோலியானது. இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவத்தில் ஒன்றுபீகாரைசேர்ந்த இரு குழுக்களில் ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில்தமிழகத்தைசேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக்கொண்டது. ஆனால் இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாகபோலிசெய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது”என்றார்.

முன்னதாக 'தமிழகத்தில் பணிபுரியும் பீகார்தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி பீகாரில் வசிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைஇயக்குநருக்குநான் உத்தரவிட்டுள்ளேன்' என பீகார் முதல்வர் நிதிஷ்குமார்ட்வீட்செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.