ADVERTISEMENT

பொறியியல் படிப்பிற்கு கணிதம், இயற்பியல் கட்டாயம் - எதிர்ப்புகளால் பின்வாங்கியது ஏ.ஐ.சி.டி.இ 

12:03 PM Mar 13, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொறியியல் பட்டப்படிப்பு படிக்க, பள்ளிக் கல்வியில் இயற்பியலும், கணிதமும் கட்டாயம் கற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இந்தநிலையில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழு (ஏ.ஐ.சி.டி.இ), நேற்று (12.03.2021) பொறியியல் பட்டப்படிப்பிற்கு கணிதம் மற்றும் இயற்பியல் தேவையில்லை என்றும், இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து அமலாகும் எனவும் தெரிவித்திருந்தது.

இதற்கு கல்வியாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழு, தனது அறிவிப்பை தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் மீண்டும் கட்டாயமாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT