ADVERTISEMENT

பால்கோட் தாக்குதலில் உண்மையாக நடந்தது என்ன? மேத்யூ சாமுவேல் சிறப்பு கட்டுரை...

05:32 PM Apr 09, 2019 | kirubahar@nakk…

இந்தியா பாகிஸ்தான் இடையே பால்கோட் பகுதியில் நடைபெற்ற சண்டை குறித்து முன்னணி புலனாய்வு பத்திரிகையாளரான மேத்யூ சாமுவேல் INDvestigations என்ற இணையதளத்தில் எழுதியிருந்த கட்டுரையின் தமிழாக்கத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்து வரும் சண்டைகள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் குறித்து அமெரிக்காவின் பென்டகன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையான 'ஃபாரின் பாலிசி' தெரிவித்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் F 16 ரக விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக இந்தியா கூறிய புகாரை பென்டகன் சமீபத்தில் விசாரித்ததாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று அங்குள்ள F-16 ரக விமானங்களை கணக்கெடுத்ததாகவும், அதன் முடிவில் பாகிஸ்தானில் F-16 ரக விமானங்களின் எண்ணிக்கை சரியாக இருப்பதாகவும், எந்த பாகிஸ்தான் விமானங்களும் காணாமல் போகவில்லை எனவும் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் இந்திய அதிகாரிகள் முழு உலகையும் தவறாக வழிநடத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மிகப்பெரிய வாதத்திற்கான ஒரு தலைப்பு! பொறுமையுடன் படியுங்கள்...

என்னுடைய வீடு இருக்கு அடுக்குமாடி குடியிருப்பில், பல மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். என் குடும்பத்திலும் இந்திய பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் உள்ளனர். என் தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் நீண்ட காலம் இராணுவத்திற்கு சேவை செய்துள்ளனர். 35 ஆண்டுகள் என் தந்தை பாதுகாப்பு படையில் பொதுமக்களுக்காக பணியாற்றினார் என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இவர்கள் மட்டுமல்லாது எனது உறவினர்களும் இந்திய விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதுவே பாதுகாப்பு துறையில் எனது குடும்பத்தினரின் பங்கு பற்றிய சுருக்கமான ஒரு உரையாகும்.

1971 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் ஒரு பகுதியாக இருந்தார்கள் என நான் கூறுகையில், நான் ஏன் இதனை பற்றி பேச ஆர்வமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன் என வாசகர்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

இரு வாரங்களுக்கு முன்னர், சில அதிகாரிகள் என்னிடம் வந்து, இந்திய ஊடகங்கள் ஏன் பால்கோட் தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிகொண்டுவந்து கூற ஆர்வம் காட்டவில்லை என கேட்டனர். அப்போது நான் அவர்களிடம், உண்மையில் அங்கு என்ன நடந்தது சொல்லுங்கள்"என கேட்டேன்.

உண்மையான நிகழ்வுகள் மட்டுமே விவரிக்கப்பட்டிருந்தால், உயர் முடிவுகளை எடுக்கும் அந்த அதிகாரிகளுக்கு அவர்கள் பெற்ற தவறான ஆலோசனை பற்றி மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அவர்களால் அந்த உண்மையை ஜீரணித்திருந்திருக்க முடியாது. மேலும் இத்தகைய கடினமான விஷயங்களைச் சரியான வழி வரைபடத்துடன் மட்டுமே செயல்படுத்த முடியும் என அறிந்திருப்பார்கள்.

நான் பேசிய அதிகாரி என்னிடம், "நமது MI-17-V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி தெரியுமா"என கேட்டார். சில ஊடகங்கள் இதற்கு காரணம் நம்முடைய தவறுதான் என கூறின. நம்முடைய வான் படையின் ஏவுகணையே தவறாக நமது ஹெலிகாப்டரை தாக்கிவிட்டது என ஊடகங்கள் குறிப்பிட்டன. அது உண்மையா? என நான் கேட்டேன்.

"நமது ஹெலிகாப்டர் பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானத்திலிருந்து வந்த ஏவுகணையாலேயே சுடப்பட்டது. அதில் நம்முடைய துணிச்சலான 7 வீரர்களை நாம் இழந்துவிட்டோம்" என அந்த அதிகாரி என்னிடம் விளக்கினார்.

மேலும் பேசிய அவர், அதன் பிறகு போர் விமானத்தில் இருந்து ஒரு பைலட் வெளியே குதிக்கும் வீடியோ ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அது பாகிஸ்தான் பைலட் தப்பி சென்ற காட்சி என மக்களிடையே எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால் இதுகுறித்து அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியபோது, வீடியோவில் காணப்பட்டவர் வேறு யாரும் இல்லை, இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் தான் என கூறினார். இப்படி ஒரு முட்டாள்தனம் எப்படி பரப்பப்பட்டது என்று அந்த அதிகாரியை நான் கேட்டேன்?

அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி, "எந்தவொரு திட்டமிடலும் இன்றி நாங்கள் அந்த பாலகோட் தாக்குதலை நடத்தினோம். இந்த தாக்குதலுக்கு பின் அவர்களிடமிருந்து எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் வரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நங்கள் முழுமையாக தயாராவதற்கு, அதிக நேரம் தேவைப்படும். அப்படி தயாரானால் தான் நாம் எல்லா வகையிலும் சரியாக பாதுகாக்க முடியும். இப்படி ஒரு அவசர நடவடிக்கையை எடுக்க நமது பிரதமருக்கு அறிவுறுத்தியது யார் என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். ஊடகங்கள் தான் சரியான களநிலவரத்தையும், பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் பாகிஸ்தான் நாட்டின் F-16 விமானம் இந்திய ஹெலிகாப்டரை சுட பயன்படுத்திய ஏவுகணை பாகங்களை வைத்துக்கொண்டு அது பாகிஸ்தான் விமானத்தின் பாகங்கள் என கூறும் மூத்த அதிகாரிகளை பற்றியும் எடுத்து கூறவேண்டும். இத்தகைய தவறான செயல்கள் (தாக்குதல்கள்) நம் பலவீனத்தை பற்றி நம் எதிரிகள் அறிந்துகொள்ளவே வாய்ப்பாக அமையும் என கூறி உரையாடலை முடித்துக்கொண்டார் அந்த அதிகாரி.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலுக்குப் பிறகு, ஏன் இந்த ஆலோசகர்கள் யாரும் மீண்டும் பிரதமருக்கு இந்தியா வேண்டும் என எந்த அறிவுரையும் கூறவில்லை?

இதற்கிடையில், பாகிஸ்தான் துருப்புக்கள் இந்திய எல்லைக்கு அருகே பறந்து சென்றன. நம்மிடம் வான் ஏவுகணைகளும் இருந்தன. ஆனால் ஏன் இந்திய ராணுவத்திற்கு பதில் தாக்குதல் நடத்த அனுமதி தரப்படவில்லை. பாகிஸ்தான் செய்தது போல ஏன் நம்மால் திருப்பி தாக்க முடியவில்லை? நமது திறமையுள்ள படையை அமைதி காக்க செய்வதன் மூலம் பாகிஸ்தானுக்கு நாம் என்ன பதில் கொடுக்க விரும்பிகிறோம். தாக்குதல் நடந்த 24 மணி நேரத்தில் நாம் அவர்களது எல்லை பகுதியில் ஊடுருவி அவர்கள் நாட்டில் தாக்குதல் நடத்தினோம். ஆனால் அதற்கு அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நமது துணிச்சல் மிகு வீரர்களை இழந்தோம். அதன்பின்னர் வந்த நெருக்கடியை நாம் அப்படியே விட்டுவிட்டோம். குறைந்த பட்சம் ஒரு கௌரவமான எதிர் தாக்குதல் நடத்தவாவது நமது படையினருக்கு நாம் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கு வேண்டும். இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்தது என்பதை பற்றி கண்டறிய உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நான் நமது பிரதமரிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

நாரதா நியூஸ் நிறுவனத்தின் நிறுவனர் மாத்யூ சாமுவேல். (புகழ்பெற்ற இந்திய புலனாய்வு பத்திரிகையாளர்)

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT