Mata Vaishno Devi Bhawan in Katra incident today

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.

Advertisment

புத்தாண்டையொட்டி, வழிபட வைஷ்ணவி தேவி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி டெல்லி, ஹரியானா, ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது. பக்தர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.