ADVERTISEMENT

முதுநிலை நீட் தேர்வு மே 21-ல் நடைபெறும்!

11:42 PM Feb 04, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒத்திவைக்கப்பட்ட நீட் முதுநிலை நுழைவுத்தேர்வுகள் மே 21- ஆம் தேதி நடைபெறும் என மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியம் (National Board of Examinations in Medical Sciences- 'NBEMS') இன்று (04/02/2022) அறிவித்துள்ளது.

https://nbe.edu.in/ என்ற மருத்துவ அறிவியல் தேர்வுகளுக்கான தேசிய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று முதுநிலை நீட் தேர்வுக்கு வரும் மார்ச் மாதம் 15- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 21- ஆம் தேதி தேர்வுக்கு மே 16- ஆம் தேதி அன்று ஹால் டிக்கெட் வெளியாகும் நிலையில் ஜூன் 20- ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு வாரங்கள் வரை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT