வெளிமாநிலத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலமான உ.பிக்கு திரும்பிய தொழிலாளர்களை பைய்ரெய்லி மாவட்ட எல்லையிலேயே சாலையில் அமரவைத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கிருமி நாசினியை ராட்சத குழாய் மூலம் பீய்ச்சியடித்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர், 33,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ள சூழலில், இதிலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் சரியான அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மாநில அரசுகள் உடனடியாக செய்து தர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இடம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் வெளிமாநிலத்திலிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பைய்ரெய்லி மாவட்டத்துக்குள் வந்த தொழிலாளர்களை மாவட்ட எல்லையில் நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தினர், அவர்களைச் சாலையில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினியை வேகமாகத் தெளித்தனர். இந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், தங்களது சொந்த மாநில மக்களையே இப்படியா நடத்துவது என பலரும் உ.பி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.