Masks and social distancing may go on for two years in goa

Advertisment

கரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிவரும் எனக் கோவா முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலாக கரோனா இல்லாத மாநிலமாக மாறிய கோவா, ஊரடங்கைத் தளர்த்தினாலும், பொதுஇடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை மக்கள் தவறாது பின்பற்றவேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பின்பற்றப்பட வேண்டிவரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கோவாவின் பொது இடங்கள், அலுவலகம், சாலைகள், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதைச் செலுத்தத் தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டாண்டு காலத்திற்கு, இதே பழக்கங்களை மேற்கொள்ள வேண்டி வரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.