விமானப் பயணத்தின்போது முகக்கவசம் கட்டாயம்!

Mask must be worn during a flight!

விமானப் பயணத்தின் போது, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிசங்கர், அண்மையில் விமான பயணம் மேற்கொண்ட போது, கரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து புகார் எழுப்பியிருந்தார். இதனை டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. முகக்கவசம் அணியாதவர்களை விமானத்தில் பயண செய்யக் கூடாதவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, விமான பயணத்தின் போது, முகக்கவசம் அணிவதை விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்தால் விமானம் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Mask
இதையும் படியுங்கள்
Subscribe