ADVERTISEMENT

மாருதி ஆல்டோ 800 இனி கிடையாதா...!

10:34 AM Nov 28, 2018 | tarivazhagan

மாருதி சுசூகி நிறுவனம் தனது ஆல்டோ 800 மாடல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று சந்தையில் எவ்வளவு விலை உயர்ந்த கார்கள் வந்திருந்தாலும் மாருதி ஆல்டோ 800, அதன் குறைவான எடைக் காரணமாகவும், அதனை எளிதாக இயக்கக்கூடிய தன்மைக்காகவும் பலரின் தேர்வாக இருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுற்றுசூழல் காரணமாக அனைத்து வாகனங்களும் பிஸ் 6 இன்ஜினுக்கு மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுதான் மாருதி ஆல்டோ 800 மடலின் உற்பத்தியை நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வரும் 2019-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் மாருதி ஆல்டோ 800 உற்பத்தி நிறுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி சுசூக்கி ஆல்டோ 800 மாடல் நிறுத்துவதற்கான முக்கிய காரணங்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் , ஏர்பேக் (AirBag) மற்றும் பிஎஸ் 6 போன்றவற்றை பொருத்த அதிக செலவாகும் என்பதற்காகவும் அதற்கு பதிலாக புதிய மாடல் உற்பத்தியில் இறங்குவது சிறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT