Skip to main content

மாருதி ஆல்டோ 800 இனி கிடையாதா...!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

மாருதி சுசூகி நிறுவனம் தனது ஆல்டோ 800 மாடல் கார் உற்பத்தியை நிறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று சந்தையில் எவ்வளவு விலை உயர்ந்த கார்கள் வந்திருந்தாலும் மாருதி ஆல்டோ 800, அதன் குறைவான எடைக் காரணமாகவும், அதனை எளிதாக இயக்கக்கூடிய தன்மைக்காகவும் பலரின் தேர்வாக இருந்தது. 

 

 

as

 

சுற்றுசூழல் காரணமாக அனைத்து வாகனங்களும் பிஸ் 6 இன்ஜினுக்கு மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுதான் மாருதி ஆல்டோ 800 மடலின் உற்பத்தியை நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வரும் 2019-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் மாருதி ஆல்டோ 800 உற்பத்தி நிறுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

மாருதி சுசூக்கி ஆல்டோ 800 மாடல் நிறுத்துவதற்கான முக்கிய காரணங்கள், ஏபிஎஸ் பிரேக்கிங் , ஏர்பேக் (AirBag) மற்றும் பிஎஸ் 6 போன்றவற்றை பொருத்த அதிக செலவாகும் என்பதற்காகவும் அதற்கு பதிலாக புதிய மாடல் உற்பத்தியில் இறங்குவது சிறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிமெண்ட் விலை அதிகரிக்கும்... உற்பத்தியாளர்கள் தகவல்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

Cement prices to rise ... Manufacturers Info!

 

சிமெண்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் அதிகரிக்கும் என சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை விலை அதிகரிக்கும்.

 

நாடுமுழுவதும் உள்ள அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கான நிலக்கரி கையிருப்பு என்பது குறைந்து வருகிறது. இதனால் விரைவில் நிலக்கரி தட்டுப்பாடு என்பது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைகளில் முக்கிய எரிபொருள் நிலக்கரி என்பதால் அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டியுள்ளது. இதனால் 50 கிலோ எடை கொண்ட ஒரு சிமெண்ட் மூட்டையின் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும்  நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிமெண்ட் உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையும் அதிகரிக்கும், உதாரணமாக ஒரு மூட்டை சிமெண்ட் 340 ரூபாய் என இருந்தால் 400 ரூபாய்க்குமேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரோனா ஊரடங்கிற்குப் பிறகு கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சிமெண்ட் விலையேற்றம் என்பது நுகர்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

நான்கு மாதங்களில் இரண்டு முறை உயர்ந்த கார்களின் விலை..! காரணம் என்ன..?

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Maruti Suzuki car prices rose

 

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, நான்கு மாதங்களுக்குள் தனது நிறுவனத்தின் கார்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. மாருதி ஆல்டோ துவங்கி, மாருதி கிராண்ட் விட்டாரா வரை மொத்தம் 15 மாடல் கார்களை மாருதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் துவக்க மாடலான மாருதி சுசூகியின் விலை 3 முதல் 4.5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் உயர்தர காரான மாருதி கிராண்ட் விட்டாரா மாடலின் விலை 24.5 இலட்சமாக உள்ளது. 

 

இந்நிலையில், இந்நிறுவனங்களின் குறிப்பிட்ட கார் மாடல்களின் விலை 1.6% அதாவது 22 ஆயிரம் வரை உயர்த்தப்படுவதாக மாருதி அறிவித்துள்ளது. ஆனால், எந்த மாடல்களின் விலை உயர்கிறது என்பதை சரியாக குறிப்பிடவில்லை. கார் தயாரிப்புக்கான உள்ளீட்டு பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காரணத்தினால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.