publive-image

தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குறை கேட்பு கூட்டத்தில் அமைச்சர் ரோஜாவிடம் முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Advertisment

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, முதியவர் ஒருவரிடம் அமைச்சர் ரோஜா, முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதற்கு பதிலளித்த முதியவர், தனக்கு உதவித்தொகை கிடைப்பதாகவும், ஆனால் தன்னை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அமைச்சர் ரோஜா, முதியோர் உதவித்தொகை தான் தர முடியும், கல்யாணமெல்லாம் செய்து வைக்க முடியாது என்றார்.

முதியவரின் கேள்வியால் அமைச்சர் ரோஜாவும், அங்கிருந்தவர்களும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

Advertisment