விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் அண்மையில் ஒரு ஷூட்டிங்கிற்காக சண்டிகருக்கு சென்றுள்ளார்.

Advertisment

marriott hotel faces consequences of banana controversy

அப்போது ஜே.டபிள்யூ. மாரியாட் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய அவர், அங்கு சாப்பிடுவதற்காக வாழைப்பழம் கேட்டுள்ளார். அதனை கொண்டுவந்து கொடுத்த ஹோட்டல் ஊழியர், அதனுடன் கொண்டுவந்த பில் ராகுல் போஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இரண்டு வாழைப்பழங்களின் விலை 442 ரூபாய் என அந்த பில்லில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர், பதிவிட்டிருந்த ஹோட்டல் பில்லில், உணவு 375 ரூபாய் என்றும் ஜி.எஸ்.டி 67.50 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கண்ட சுங்க வரி விதிப்புத்துறை, அந்த ஹோட்டலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, "பழங்கள் வரியில்லா வகையில் வருகின்றன. எனவே, வாழைப் பழத்துக்கு எதற்காக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது என உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment