The marriage was to take place in the morning; The lover who killed the father of the bride

Advertisment

காலையில் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண்ணின் தந்தை காதலனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது கல்லம்பலம் என்ற பகுதி. அப்பகுதியில் வசித்து வருபவர் ராஜு. இவரது மகள் ஸ்ரீ லட்சுமி.ஸ்ரீ லட்சுமி, வீட்டிற்கு அருகே உள்ள ஜிஷ்ணு என்ற இளைஞரை ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் திடீரென இளைஞன் ஜிஷ்ணுவின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் தரப்பினர் திருமணத்தை ரத்து செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ லட்சுமிக்கு வேறொரு இளைஞருடன்திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது.

nn

Advertisment

இன்று காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது பெண் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு பெண்ணின் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு, தனதுசகோதரர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு திருமண வீட்டிற்குள் புகுந்து ராஜுவை சரமாரியாக வெட்டினர்.இது தொடர்பாக உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிஷ்ணு, அவரது சகோதரர் மற்றும் நண்பர்கள் இருவர் என நான்கு பேரையும் தேடி வருகின்றனர். கேரளாவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.