a marriage broken by a bathroom fight; Raymond towards the slope

இந்தியாவின் மிக முன்னணி பேப்ரிக் நிறுவனங்களில் ஒன்றான ரேமாண்ட் குழுமத்தின் தலைவர் கௌதம் சிங்கானியா. தொழிலதிபர் கௌதம் சிங்கானியாவிற்கும், அவருடைய மனைவி நவாஸ் மோடிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வீட்டில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்துவதில் தகராறு எழுந்ததாகவும், அதில் கௌதம் சிங்கானியா மனைவியை அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

மும்பையில் ஜே.கே என்ற பெயரில் இவர்கள் வசித்து வந்த வீட்டில் மொத்தம் 39 பாத்ரூம்கள் உள்ளதாம். இந்த வீட்டின் மொத்த மதிப்பு 6 ஆயிரம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவியின் பாத்ரூமைதான் பயன்படுத்துவேன் என கௌதம் சிங்கானியா அவருடன் சண்டையிட்டுள்ளார். இதில் மனைவியை கௌதம் சிங்கானியா தாக்கியதாகக் கூறப்படுகிறது. தன்னுடைய அதிகாரத்தை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளதோடு, விவாகரத்தும் கேட்டுள்ளார்.

Advertisment

இதனால் 32 ஆண்டு கௌதம் சிங்கானியா-நவாஸ் மோடி திருமண வாழ்கை முறிந்துள்ளது. இவர்களின் குடும்ப சண்டை காரணமாக ரேமாண்ட் குழுமத்தின் பங்குகள் சரியத்தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ரேமாண்ட்குழும நிறுவனத்தை தோற்றுவித்த கௌதம் சிங்கானியாவின் தந்தை விஜய்பட் சிங்கானியா, 'தான் உருவாக்கிய நிறுவனத்தின் மொத்த அதிகாரத்தையும் மகனிடம் கொடுத்தது தவறு' என கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் கௌதம் சிங்கானியாவுடைய தாய் அவருடைய மருமகள் மற்றும் பேத்திகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

பாத்ரூம் சண்டை தொழிலதிபரின் வாழ்க்கையை மணமுறிவை நோக்கி சென்றதோடு, மிகப்பெரிய நிறுவனத்தின் மதிப்புகளையும்குறைத்துள்ளது என தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment