பப்ஜி விளையாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

Advertisment

pubg

மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில், நாகேஷ் கோரே (24) அன்னபுர்னே ( 22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பப்ஜி விளையாடியபடி ரயில் தண்டவளத்தை ஒட்டி சென்றுள்ளனர்.அப்போது அந்த வழியாக ஐதராபாத் - ஆஜ்மீர் ரயில் வந்துள்ளது.

ரயில் வருவதை கவனிக்காமல் அவர்கள் பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது அவர்கள் மீது ரயில் மோதியதில் அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு இளைஞர்களும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இறந்த இளைஞர்களின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும், எதிர்மறை சிந்தனைகளையும் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த விளையாட்டு பல இடங்களில் தடை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.