/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjpflag-std.jpg)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள் நடக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மும்பையின் ஜல்னா தொகுதி வேட்பாளரும், பாஜக மூத்த தலைவருமான ராவ்சாகேப் தன்வே நேற்று அப்பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடிக்கு எதிராக திருடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். எனக்கு எதிராகவும் அப்படி சிலர் கூட்டம் சேர்ந்துள்ளனர். அவர்களை நீங்கள் தோற்கடிக்க வேண்டும். தேர்தலில் எனக்கு நீங்கள் ஆதரவு தந்து வாக்களியுங்கள். நான் உங்களுக்கு பணம் தருகிறேன். எனது எதிரிகளிடம் பணம் இல்லை. நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பீர்களா?" என பேசினார். அவரின் இந்த பேச்சு தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us