Advertisment

ஆம்புலன்ஸ் வர தாமதம்... குழந்தையுடன் உயிரிழந்த இளம் நடிகை...

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட மராத்தி நடிகை பூஜா உயிரிழந்துள்ள சம்பவம் மஹாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

marathi actress pooja zunjar passed away

மராத்தி மொழியில் ஹீரோயினாக நடித்துள்ள 25 வயதான பூஜா ஸுஞ்சார் மகாராஷ்ட்ரா மாநிலம் ஹிங்கோலியில் வசித்து வந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கோரேகானில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குப் பிறந்த குழந்தை, சில நிமிடங்களிலேயே இறந்துவிட்ட நிலையில், பூஜாவின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.

Advertisment

இதனையடுத்து பூஜாவை உடனடியாக, ஹிங்கோலி சிவில் ஹெல்த் சென்டருக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரை வேறு மருத்துவமனைக்கு அழைத்த செல்வதற்காக ஆம்புலன்ஸுக்கு கூறிவிட்டு அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸுக்காக காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரமாகக் காத்திருந்த பின் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது. பின்னர் அந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு பூஜாவை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தநிலையில் ’ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைத்திருந்தால் பூஜா பிழைத்திருப்பார்’ என்று அவரது உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்து வருகின்றனர்.

Actress Maharashtra marathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe