train

மஹாராஷ்டிராவில் இரண்டாவது நாளாக தொடர்கிறது மராத்தா போராட்டம். மராட்டிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி நேற்று பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லபடியாக தொடங்கிய பந்த், இறுதியில் கலவரமானது. அவுரங்காபாத் மாவட்டத்தில் காவலர்களின் இரண்டு வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. ககாசாஹெப் ஷிண்டே, என்பவர் இடஒதுக்கீடு வேண்டும் என்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

அவுரங்காபாத்தில், காவலர்களுடன் போராட்டக்காரர்கள் மோதல் செய்தனர். அப்போது தலைமை கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். அதேபோல இடஒதுக்கீடு கேட்டு, போராட்டக்காரர்களில் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றனர்.

Advertisment

இதனை தொடர்ந்து முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. உதிர் மாவட்டத்தில் இன்று இரு சமூகத்திற்கிடையே கலவரம் ஏற்பட்டுள்ளது. மராத்தா சமுதாயத்தினர் இன்று மும்பையில் முழு அடைப்பு நடத்திவருகின்றனர்.